உ.கோப்பை 2011 கால் இறுதிச் சுற்று குறித்து
நேற்று நடந்த முக்கியமான 2 ஆட்டங்களில், தெ.ஆ வும், unpredictable பாகிஸ்தானும் வெற்றி பெற்றதில், குரூப் A இடங்கள் நிச்சயிக்கப்பட்டதுடன், க்ரூப் Bயில் தெ.ஆ, இந்தியா, வெ.இ, இங்கிலாந்து என்று 4 அணிகள் தகுதி பெற்று விட்டன. நிஜப்புலி என்று நான் வர்ணித்திருந்த பங்களாதேஷ் புலித்தோல் போர்த்திய சுண்டெலி என்பது எனக்கு சற்று லேட்டாக தெரிய வந்தமைக்கு மாப்பு கேட்டுக் கொள்கிறேன் :)
இன்று நடக்கவிருக்கும் இந்தியா-வெ.இ சேப்பாக்க ஆட்டம் is only of academic interest. அதாவது, இரண்டாவது இடத்தில் இந்தியாவா அல்லது வெஸ்ட் இண்டீஸா என்பதை இந்த ஆட்டம் தீர்மானிக்கும், அதாவது, இந்தியா கால் இறுதிச் சுற்றில் எந்த அணியுடன் விளையாடும் என்பதை. இந்தியா தோற்றால், நமது லட்சணம் தெரிந்து போய் விடும்! ஆனாலும், ever hopeful இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், டிக்கெட்டுக்காக போலீஸ் அடி வாங்கியதை மறந்து விட்டு, எப்போதும் போல பேராதரவு தருவது தொடரும்! இன்றைய ஆட்டத்தில், வெற்றி என்பது இந்திய அணிக்கு ஒரு உத்வேகத்தையும், ஊக்கத்தையும் கொடுக்கும் என்பது நிச்சயம்.
சரி, கால் இறுதிச் சுற்றில் யார் யாரை எதிர்த்து ஆடப் போகிறார்கள் என்று பார்க்கலாம்! இந்தியா இன்று வெற்றி பெற்றால், இந்தியா கால் இறுதியிலேயே, ஆஸ்திரேலியாவை சந்திக்க வேண்டிய (துர்பாக்கிய) நிலை ஏற்படும். சுழற்பந்து வீச்சுக்கு தோதான ஆடுகளம் அமைந்தால் மட்டுமே, நாம் அடுத்த சுற்றில் பிழைத்து முன்னேற முடியும். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான எந்த விஷயமும் ஆடுகளத்தில் இல்லாதவாறு இருத்தல் அவசியம்! இவ்வாட்டம், மிர்பூரில் நடைபெறுவதாலும், பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாலும், ஆடுகள மேட்டர் குறித்து கவலை கொள்ள வேண்டியதில்லை :)
கால் இறுதி pairings இப்படி இருக்கும்:
பாகிஸ்தான் - வெ.இ
ஸ்ரீலங்கா - இங்கிலாந்து (இந்த ஆட்டம் சூப்பராக இருக்கும் என்று நம்பலாம்!)
ஆஸ்திரேலியா - இந்தியா
நியூசிலாந்து - தெ.ஆ
இந்தியா வெ.இ யுடன் "சாதாரணமாக" தோற்றால், இந்தியா ஸ்ரீலங்காவை சந்திக்க நேரிடும்! இந்த ஆட்டத்துக்கு சுழற்பந்துக்கு சாதகமான ஆடுகளம் அமைப்பது, சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதற்கு ஈடானது :) ஒரு advantage உள்ளது, இந்தியாவில் நடைபெறும் ஆட்டமிது என்பதால்! சர்தார் படேல் (மோடேரா, அகமதமாத்) தான் காப்பற்ற வேண்டும் :-)
கால் இறுதி pairings இப்படி இருக்கும்:
பாகிஸ்தான் - இங்கிலாந்து (இந்த ஆட்டமும் சூப்பராக இருக்கும் என்று நம்பலாம்!)
ஸ்ரீலங்கா - இந்தியா
ஆஸ்திரேலியா - வெ.இ
நியூசிலாந்து - தெ.ஆ
இறுதியாக, இந்தியா மகா மோசமாக இன்று தோற்றால், B குரூப்பில் நாலாவது இடத்துக்கு தள்ளப்பட்டு, பாகிஸ்தானை சந்திக்க வேண்டிய அதி துர்பாக்கிய நிலையும் வரலாம். அதுவும், நம்மூரில் இல்லை, மிர்பூரில்! இந்த ஆட்டத்தில், எந்த அணிக்கு பங்களாதேஷ் மக்கள் ஆதரவு இருக்கும் என்று மிக எளிதில் சொல்லி விடலாம் தானே :)
என்றென்றும் அன்புடன்
பாலா
2 மறுமொழிகள்:
Test !
It was decided long time ago that if the hosting nation, if qualified, will play the knock out matches in own grounds. Which means that India will play the QF in Ahmedabad (& SF in Mohli, if they win the QF).
Post a Comment